பதிவு செய்த நாள்
06
ஏப்
2022
02:04
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. ஏப்.,16 வரை நடக்கிறது.ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில் மிகவும் பழமையானது. இவ்வாண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஏப்.,4ல் விநாயகர் வழிபாடு, காவல் தெய்வம்வனசங்கரி அம்மன்கோயிலில் காளியாட்டம் நடந்தது. நேற்று (ஏப்.,5ல்) காலை சிறப்பு அபிேஷக, அலங்காரத்தில் கொடியேற்றம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,12 ல் மீனாட்சி அம்மன் பட்டாபிேஷகம் காட்சியும், ஏப்.,13ல் திக்விஜயம், ஏப்.,14ல்மீனாட்சி சொக்கநாதர் சுவாமிக்கு காலை 10:00மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவில் தினசரி காமாட்சி, சிவபூஜை உள்ளிட்ட அலங்காரத்தில் பூஜை நடக்கிறது. ஏப்., 15ல் பொன்னுாஞ்சல் வைபவமும், ஏப்., 16ல் தீர்த்தவாரி, சுவாமி, திருவீதி உலா உடன் விழா முடிவடைகிறது.