திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அபிராமியம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.14 இரவு 7:45 மணிக்கு திருக்கல்யாணம், பூப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது.ஏப்.15 மாலை 6:00 மணிக்கு தேரோட்டம், ஏப்.16 ல் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.