காரைக்கால்: புதுச்சேரி அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் குருபெயர்ச்சி யாகத்திற்கு முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது.
அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பாக சுபகிருது வருட பஞ்சாங்கம் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி நேற்று முன்தினம் நேரில் சென்று அகில இந்திய துணைத் தலைவர் சிவஸ்ரீ ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் வழங்கினார்.மேலும் மீனராசி குரு சஞ்சார பெயர்ச்சியை முன்னிட்டு பூந்தோட்டம் ராசிமண்டல குரு தட்சிணாமூர்த்தி குரு பெயர்ச்சி யாகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உலக நன்மை வேண்டி வரும் 14ம் தேதி பூந்தோட்டம் ஸ்ரீ ராசிமண்டல ஸ்ரீகுரு பகவானுக்கு குரு பெயர்ச்சி மஹா யாகம் நடைபெறுகின்றது.அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பாக நடைபெறுகின்ற இந்த குரு பெயர்ச்சி யாகத்திற்கு கலந்து கொள்ள அழைப்பு சேவா சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில தலைவர் சிவஸ்ரீ பாலசுப்ரமணிய சிவாச்சாரியார்,மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவஸ்ரீ சேது சுப்பிரமணிய சிவாசாரியார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.சங்கம் சார்பாக சுபகிருது வருட வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வேதாகம ஆசீர்வாத பிரசாதம் வழங்கப்பட்டது.