ஆயிரங்கண் மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2022 04:04
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, திருநகரம் சாலியர் மகாஜன சபைக்கு பாத்தியப்பட்ட, ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 8 ம், நாள் விழாவாக பொங்கலை முன்னிட்டு, பெண்கள் விரதம் இருந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வர். 9 ம் நாள் கோயிலின் முன்பு பூக்குழி அமைக்கப்பட்டு பக்தர்கள் அதில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர். 10 ம் நாள், விழாவாக, பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருவார். ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.