கொடைரோடு: அம்மையநாயக்கனூர் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா மார்ச் 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று கம்பம் வெட்டுதல், கரகம் வைத்து கேடயத்தில் அம்மன் பவனி வந்தார். இளைஞர் நற்பணி மன்றத்தின் மண்டகப்படி நடந்தது. அடுத்தடுத்த நாட்களில் அம்மன் சிம்மம், காளை, யானை வாகனத்தில் பவனி வந்தார். ஏப்ரல் 3ல் அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. அன்ன வாகனத்தில் வலம் வந்தார். நேற்று முன்தினம் சேஷ வாகனத்தில் காட்சியளித்தார். நேற்று குதிரை வாகனத்தில் புறப்பட்டு இடையபட்டி காளி பகவதி அம்மன் கோவிலில் தங்கி காட்சி அளித்தார். மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று பால்குடம், சந்தன குடம், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இரவில் புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி வருகிறார். நாளை அக்னி சட்டி எடுத்து, மஞ்சு நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை புறப்பட்டு செல்கிறார். உரிமரம் ஏறுதல் முளைப்பாரி எடுத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.