தேவகோட்டை: தேவகோட்டையில் கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் தொற்று காரணமாக இரு ஆண்டுகளாக பிரமோற்சவம் நடைபெறவில்லை. தொற்று குறைவு மற்றும் கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்ட நிலையில் இவ்வாண்டு சித்திரை பிரமோற்சவத் திருவிழா ஏப். 10 ந்தேதி துவங்குகிறது. அன்று பகல் 11 மணியளவில் கொடியேற்றமும் மாலை 6 மணியளவில் காப்பு கட்டுதலும் நடக்கிறது. 15 ந்தேதி திருக்கல்யாணம், 18 ந்தேதி தேரோட்டம் நடைபெறும். தினமும் ராமபிரான் சீதாதேவி சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.