திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவிலில் சூரிய ஒளி சிவன், பார்வதி மேல் உதிக்கும் நிகழ்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2022 04:04
உளுந்தூர்பேட்டை: திருநாவலூர் மனோன்மணி உடனுறை பக்தஜனேஸ்வரர் கோவிலில் சூரிய ஒளி சிவன், பார்வதி மேல் உதிக்கும் நிகழ்வு நேற்று துவங்கியது.
உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் மனோன்மணி உடனுறை பக்தஜனேஸ்வரர் கோவிலில் சூரிய ஒளி சிவன், பார்வதி மேல் உதிக்கும் நிகழ்வு நேற்று துவங்கியது. அதனையொட்டி நேற்று அதிகாலை 4 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணியிலிருந்து 6. 25 மணி வரை சூரிய ஒளி சாமி மேல் உதிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இந்த நிகழ்வு வரும் 10ம் தேதி வரை நடக்கிறது.