அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் அருகே கல்லணை பாலமரத்தம்மன் என்ற சுந்தரவள்ளி அம்மன் கோயில் பங்குனி உற்சவ விழா 18 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. கிராம விநாயகர் கோயிலில் இருந்து வானவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்துடன் அம்மனை அழைக்க அலங்காநல்லுரர் வேளார் வீடு சென்றனர். ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக சென்று அம்மனை கிராமத்திற்கு அழைத்து வந்து வழிபட்டனர். சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தார்கள் மற்றும் மரியாதைக்காரர்கள் செய்திருந்தனர்.