பதிவு செய்த நாள்
07
ஏப்
2022
05:04
பெ.நா.பாளையம்: இடையர்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை தடாகம் ரோடு, இடையர்பாளையத்தில் மாகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு மங்கல இசை, திருவிளக்கு வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, தீர்த்த குடங்கள் ஊர்வலம், வேள்வி சாலை புறப்பாடு, 108 காய், கனி கிழங்கு உள்ளிட்ட மூலிகைகளுடன் முதல் கால வேள்வி உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, இரண்டாம் கால, மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி, கும்பாபிஷேக நாளன்று நாடி சந்தானம், அருள்நிலை ஏற்றுதல் குடங்களுடன் பக்தர்கள் திருக்கோயில் வலம் வந்தனர். தொடர்ந்து, கவுமார மடாலயம் சன்னிதானம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆகியோர் முன்னிலையில் விமானத்திற்கும், மூல மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, திருமஞ்சன அலங்காரம், பூஜை, பேரொளி வழிபாடு, திருநீறு பிரசாதம் வழங்குதல்கள் நிகழ்ச்சி நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மூன்று நாட்கள் மகா அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.