தேவகோட்டை: தேவகோட்டையில் உள்ள தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா ஒரு வாரம் நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரங்கள் பூஜைகள் நடந்தன. அம்மன் கரகம் எடுத்து வந்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து பூச்சொரிதல் செய்தனர். பக்தர்கள் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலில் முளைக்கொட்டு நடத்தினர். நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.