சோழவந்தான்: சோழவந்தான் அருகே காடுபட்டி தாட்கோ காலனி, திருவள்ளுவர் நகர் மந்தையம்மன் கோயில் 38ம் ஆண்டு பங்குனி திருவிழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் அம்மனுக்கு கரகம் எடுத்து சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தன. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் சமுதாய கிணற்றில் இருந்து பால்குடம் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் கரகம் ஊர்வலம், மஞ்சள் நீராட்டுதல் மற்றும் விடையாற்றி உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.