ராமதுாதனான அனுமனுக்கு துணைநின்றவர் ஜாம்பவான். பிரம்மாவின் மூச்சுக் காற்றில் இருந்து வந்தவர் இவர். கரடி இனத்தின் தலைவரான இவர், அனுமன் செய்த வீரதீரச் செயல்களை எடுத்துச் சொல்லி, ‘கடலைக் கடந்து சீதையை மீட்பதற்கு தகுதியானவன் நீயே’ என தைரியமூட்டினார். சரியான சமயத்தில் இவர் செய்த உதவியை அறிந்த ராமர் தன் குலகுருவான வசிஷ்டருக்கு இணையாக மதித்தார். அரக்கனான ராவணனை வெல்வதற்கான அரசியல், போர் தந்திரங்களையும் இவரிடம் கேட்டறிந்தார்.