திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் உள்ள சக்கர தீர்த்தம் அர்த்தமண்டபத்தில் திரிதண்டி ஸ்ரீ ராமானுஜர் சின்ன ஜீயர் தலைமையில் ராமாயண மஹா வேள்வி கடந்த ஏப்., 6 முதல் 9 வரை நடந்தது.
நேற்று காலை இராமாயண ஹோமம், மகா பூர்ணாஹூதி நடந்தது. பட்டாச்சாரியார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம், வேதபாராயணம் பாடப்பட்டு கோயில் முன்புள்ள மண்டகப்படியில் சீதா சமேத ராமச்சந்திர மூர்த்திக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. நேற்று பகலில் சேதுக்கரை கடலில் தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவடைந்தது. திருப்புல்லாணியில் வசிக்கக்கூடிய பக்தர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் சின்ன ஜீயர் சுவாமி வழங்கினார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர், ஜெயராம் பட்டர், எம்பெருமான் டிரஸ்ட், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள் செய்திருந்தனர்.