காளியம்மன் கோவிலில் அக்னி கப்பரை நிகழ்ச்சி நடந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2022 03:04
காரைக்கால்: காரைக்காலில் உஜ்ஜயினி மகா காளியம்மன் கோவில் அக்னி கப்பரை நிகழ்ச்சி வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் மதகடி அரசலாறு ஆற்றங்கரை உஜ்ஜயினி மகா காளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று இரவு அக்னி கப்பரை நிகழ்ச்சி நடைபெற்றது.கோவிலிலிருந்து தீச்சட்டி ஏந்திய பக்தர் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தது.அப்போது வீடுகள் தோறும் அக்னி கொப்பரையை அம்மனாக நினைத்து பக்தர்கள் மாலை அணிவித்து அர்ச்சனை செய்தனர்.இறுதியாக நேற்று காலை கோவிலுக்கு வந்து சேர்ந்த அக்னி கொப்பரையை பக்தர்கள் வழிபட்டு காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காளியம்மனை வழிப்பட்டனர்.