ராமேஸ்வரம் கோயிலுக்கு எல்.ஐ.சி., பேட்டரி கார் வழங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2022 03:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு எல்.ஐ.சி., சார்பில் புதிய பேட்டரி கார் வழங்கியது.
ராமேஸ்வரம் கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் 2013 முதல் ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால் பக்தர்கள் ரத வீதியில் நடந்து சென்றதால், வயது மூத்த பக்தர்கள் பாதித்தனர். இதனை தவிர்க்க பக்தர்களை பேட்டரி காரில் அழைத்து செல்ல நேற்று எல்.ஐ.சி., வீட்டுவசதி கடன் வழங்கும் திட்டம் சார்பில் கோயில் நிர்வாகத்திடம் புதிய பேட்டரி கார் வழங்கினர். இதில் எல்.ஐ.சி., வீட்டு வசதி கடன் வழங்கும் திட்டத்தின் மேலாண்மை இயக்குனர் விஸ்வநாத், மதுரை மண்டல மேலாளர் கோவிந்தராஜ், கோயில் இணை ஆணையர் பழனிக்குமார், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, எல்.ஐ.சி., முகவர் தில்லைபாக்கியம் பலர் கலந்து கொண்டனர்.