ராமேஸ்வரம்: உலக நன்மைக்காக தனுஷ்கோடியில் ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் ராம தாண்டவம் பஜனை பிரார்த்தனை கூட்டம் நடக்க உள்ளது.
ராம நவமியான ஏப்.,10ல் அதிகாலை 5 மணிக்கு ஆன்மிக கல்வி மேம்பாட்டு கழகம் சார்பில் உலக நன்மைக்காக, இலங்கையில் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு வந்து ராமரின் சினம் தணிய ராமர் தாண்டவம் பிரார்த்தனை பஜனை கூட்டம் முதன் முதலாக தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நடத்த உள்ளனர். இதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரம் பெண்கள் பங்கேற்று கையில் தீப விளக்குடன் பஜனை பாடல் பாடி பிரார்த்தனை செய்ய உள்ளனர்.