கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி, கம்பூரில் முத்துப்பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் வீட்டுப் பொங்கல் வைக்கப்பட்டது. நேற்று நோய் நொடியில்லாமல் வாழவும், குழந்தை பாக்கியம் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் வைக்கோல் பிரி சுற்றியும், மாறு வேடம் போட்டு கல்லுக்கட்டி ஊருணியில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள முத்துப்பிடாரி அம்மன் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இத் திருவிழாவில் 7 கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெற்றது.