திருக்கல்யாண வைபவத்திற்கு முன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீனிவாசர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2022 12:04
சென்னை: திருக்கல்யாணத்திற்கு முன், பக்தர்கள் அமர்ந்துள்ள இடத்திற்கே ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் ஸ்ரீனிவாச பெருமாள் அருள்பாலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண உற்சவம் சென்னை தீவுத்திடலில், 16ம் தேதி நடக்கின்றன. அதற்கான ஏற்பாடுகள் விமர்சையாக நடந்து வருகின்றன. விழாவில் ஒரு லட்சத்திற்கு மேல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றன. அதற்கான பாதுகாப்பு குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன், சென்னை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான் தமிழக ஆலோசனைக் குழு தலைவர் சேகர் கூறியதாவது:திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வகையான வசதிகளும் மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.பக்தர்களின் பாதுகாப்பிற்காக, சென்னை காவல் துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசிக்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவத்திற்காக திருமலைகோவில் உற்சவர் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சென்னைக்கு எழுந்தருளுகின்றார். இந்தவைபவம் துவங்கும் முன் பக்தர்கள் அமர்ந்துள்ள இடத்திற்கே உற்சவர் கொண்டு செல்லப்பட்டு மங்கள ஆரத்தி காண்பிக்கப்படும். அதன் பின் திருக்கல்யாண உற்சவம் துவங்கும்.இவ்வாறு கூறினார்.