வடபழநி: வடபழநி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் ராமநவமி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. காலை பெருமாள் உத்ஸவர் ஸ்நபன திருமஞ்சனமும் திருப்பாவை சாற்றுமறை தொடர்ந்து குழந்தைகள் ராமருடைய ஸ்லோகம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். மாலை 6 மணிக்கு பெருமாள் ஹனுமந்த வாகனத்தில் உள்புறப்பாடு, விசேஷ ஆராதனைகள், பெருமாள் திருமொழி சாற்றுமறை நடைப்பெற்று பக்தர்களுக்கு தீர்த்த பிரசாத விநியோகம் என சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.