சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கயர் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் தங்களது உடம்பு முழுவதும் கரும்புலி செம்புலி குத்தி கோஷமிட்டு வந்தனர். உடம்பில் கயறு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். திருவிழாவை முன்னிட்டு பட்டாசு ஆலைகள், நிறுவனங்கள், பெரும்பான்மையான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.