Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரையில் சுவாமி ... பிறந்தது தமிழ்ப் புத்தாண்டு: தமிழகமெங்கும் கோலாகலம் பிறந்தது தமிழ்ப் புத்தாண்டு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார் குரு பகவான்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார் குரு பகவான்

பதிவு செய்த நாள்

14 ஏப்
2022
07:04

தஞ்சாவூர்: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, திட்டை வசிஷ்டேஸ்வர் கோவிலில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரினசம் செய்தனர்.

தஞ்சாவூர் அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கோவிலாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என்ற பெயர் கொண்டவர். மூலஸ்தான விமானத்தில் சந்திரகாந்தக்கால் வைத்து கட்டப்பட்டுள்ளது. அக்கல் சந்திரனில் இருந்து வரும் கதிர்களால் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தன்னுள் உறிஞ்சி 24 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் மூலவர் வசிஷ்டேஸ்வரர் மீது விழும். இத்தகையை சிறப்பு பெற்ற கோவிலில் நவக்கிரகங்களில் சுபகிரகமான குருபகவான் எங்கும் இல்லா சிறப்போடு சாமிக்கும், அம்மனுக்கும் இடையில் தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது குருபெயர்ச்சியாகும்.

அதன்படி இன்று(14ம் தேதி) அதிகாலை 4.16 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி  குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தது. பின்னர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசியினர் பரிகாரம் செய்து வழிபட்டனர். குருபெயர்ச்சியையொட்டி வருகிற 24ம் தேதி லட்சார்ச்சனையும், அதைத்தொடர்ந்து 29ம்  தேதி தொடங்கி 30ம் தேதி வரை 2 நாட்களுக்கு பரிகார ஹோமம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar