பதிவு செய்த நாள்
15
ஏப்
2022
06:04
போடி: மிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு போடி - தேனி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள தீர்த்தத்தொட்டி ஆறுமுக நாயனார், சித்திர புத்திர நாயனார் கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
* போடி - தேனி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள தீர்த்தத்தொட்டி ஆறுமுக நாயனார் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதியில் நடப்பது வழக்கம். இதனையொட்டி நேற்று முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இங்கு மூலிகை கலந்த தீர்த்த சுனைகளில் ஏராளமான பக்தர்கள் நீராடி முருகனின் அருள் ஆசி பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தக்கார் சுரேஷ் ஏற்பாடுகள் செய்திருந்தார்.
* போடி தேனி மெயின் ரோட்டில் உள்ள சித்திர புத்திரனார் கோயிலில் சித்ரபுத்திரனாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
* போடி சுப்பிரமணியர் கோயிலில் முருகன், வள்ளி, தெய்வாணைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதோடு இக்கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
* போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தன. ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்க கவச அலங்காரத்தில் சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* போடி அய்யப்பன் கோயிலில் அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரகள் நடந்தது. கனிகள் அலங்காரத்தில் அய்யப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* குரு பெயர்ச்சியை முன்னிட்டு போடி சுப்பிரமணியர் கோயிலில் தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜை அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது.