பதிவு செய்த நாள்
16
ஏப்
2022
06:04
பல்லடம்: மேற்கு பல்லடம் முத்துமாரியம்மன் கோவிலில், பூச்சாட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பல்லடம் நகராட்சி, மேற்கு பல்லடம் மாரியம்மன் கோவிலில், மூலவராக ஸ்ரீமுத்துமாரியம்மன் அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும், பூச்சாட்டு விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மார்ச் 31 அன்று, கொடியேற்றத்துடன் பூச்சாட்டு விழா துவங்கியது. ஏப்., 13 முதல் விக்னேஸ்வர பூஜை, பஞ்சலிங்கேஸ்வரர், கருக்காத்த நாயகி திருக்கல்யாண உற்சவங்கள் நடந்தன. தொடர்ந்து, பால்குடம், தீர்த்த குடம் ஆபரண பெட்டி எடுத்து வருதல், மாவிளக்கு, முளைப்பாரி, சக்தி கரகம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. நேற்று, முத்துமாரியம்மன், வராஹி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரங்கள் நடந்தன. மாலை, 6.00 மணிக்கு பொங்காளியம்மன் கோவிலில் இருந்து பூ ஓடு எடுத்து வரப்பட்டது. கருக்காத்த நாயகியுடன் பஞ்சலிங்கேஸ்வரர் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, மஞ்சள் நீராட்டு விழாவுடன், பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது.