பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், நேற்று சித்திரை தேரோட்டம் பக்தர்களின் ஹரஹர, சிவசிவ கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது. இக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப். 6 கொடி ஏற்றத்துடன் துவங்கி நடந்தது. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வந்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை விசாலாட்சி, சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு சந்திரசேகர சுவாமி பிரியாவிடையுடனும், விசாலாட்சி அம்பாள் தனித்தனி தேரில் வலம் வந்தனர். முன்னதாக விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை தேரில் சென்றனர். இதேபோல் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் நடந்தது. இக்கோயில்களில் இன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.