அன்னூர்: அன்னூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது.
அன்னூர் மாரியம்மன் கோவில் 32வது ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 5ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 13ம் தேதி காலை அபிஷேக ஆராதனையும், மதியம் அன்னதானம் வழங்குதலும் கம்மவார் சமூகம் சார்பில் நடந்தது. நேற்றுமுன்தினம் கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகம் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. மாலையில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று காலை அபிஷேக ஆராதனையும் மாலையில் திருவிளக்கு பூஜையும், சிறுவர், சிறுமியரின் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 18ம் தேதி இரவு அணிக்கூடை எடுத்து வரும் உற்சவம் நடக்கிறது. 19ம் தேதி காலை 10:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலையில் பஜனை, செண்டை மேளத்துடன், சுவாமி திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக நடக்கிறது.