கொக்கிரகுளம் முத்தாரம்மன் கோயிலில் அம்மனுக்கு 1008 லட்டு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2012 11:07
திருநெல்வேலி: கொக்கிரகுளம் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று இரவு அம்மன் 1008 லட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொக்கிரகுளம் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று மாலை 101 சிறுமிகள், பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். இரவு அம்மனுக்கு 1008 லட்டு அலங்காரத்தில் சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இன்று(24ம் தேதி) காலை பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், மாலையில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். இரவு அம்மன் சப்பரத்தில் வீதிஉலா நடக்கிறது. நிறைவாக சிறுமிகள், பெண்கள் முளைப்பாரியை தாமிரபரணி ஆற்றில் விட்டு அம்மனை வழிபடுகின்றனர். ஏற்பாடுகளை முத்தாரம்மன் கோயில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.