வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையம் கண்ணபுரம் வித்தகச் செல்வி உடனமர் விக்ரம சோல இஸ்வர திருக்கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது.
சித்திரை மாதம் ஒன்னாம் தேதி ஏப்ரல் 14 ஆம் தேதி வியாழக்கிழமை கண்ணபுரம் மாரியம்மனுக்கு பொங்கல் திருவிழாவும் நேற்று விக்ரம சோல இஸ்வர சாமி தேர் திருவிழா ரத உற்சவம் நேற்று மாலை 5 மணி அளவில் தேரோட்டம் துவங்கி 6 மணியளவில் கோவிலை வலம் வந்து நிலை நிறுத்தப்பட்டது. தேரின் இருபுறமும் வட கயிற்றினாள் ஆண்களும், பெண்களும் தேரை இழுத்தனர். தேர் வரும் பாதை மண் பாதை ஆதலால் தேரின் பின்பக்கம் இரண்டு ஜே.சி.பி., இயந்திரம் வைத்து தேரின் இரும்பு சக்கரத்தை முன்பக்கமாக தள்ளப்பட்டது. நேற்று மாலை 5 மணி அளவில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் தி.மு.க.,வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செல்வராஜ். ஆகியோருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பச்சாபாளையம் முன்னாள் தலைவர் சண்முகம், காங்கேயம்பாளையம் தலைவர் வரதராஜன், கோவில் திருப்பணி குழு நல்லாண்டீஸ்வரமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.