வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்ரா பவுர்ணமி வழிபாடு நடந்தது.
தமிழ் மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். ஏப்ரல் 14 தமிழ் வருடப் பிறப்பு முதல் இன்று வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக இம்மாதம் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னிதியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு பூஜைகளை கோவில் பூசாரிகள் செய்தனர். பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்திருந்த நிலையில், நேற்று வனத்துறை மற்றும் போலீசாரின் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருந்ததால், சுமார் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்பினர். இவர்களை போலீசார் கண்டித்தனர். மலை ஏற அனுமதிக்கபடாத பக்தர்கள் வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி, கோயிலை நோக்கி வணங்கி சென்றனர்.