ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வருகிறது. அதன் அடிப்படையில் தான் தமிழ் மாதப் பெயர்கள் உருவாக்கப்பட்டன. பவுர்ணமியன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ அதன் பெயரால் தான் மாதத்தின் பெயர் அமைந்திருக்கும். இதன் அடிப்படையில் சித்திரை நட்சத்திரத்தன்று பவுர்ணமி வருவதால் முதல் மாதம் சித்திரை எனப்படுகிறது. மற்ற எந்த பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு சித்ரா பவுர்ணமிக்கு உண்டு. எல்லா மாதங்களிலும் நிலா பிரகாசமாக இருந்தாலும் அதில் களங்கம் மெலிதாகக் காணப்படும். ஆனால் சித்ராபவுர்ணமி அன்று நிலவு தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும். சுபகிருது ஆண்டின் முதல் ழுழுநிலவான சித்ராபவுர்ணமி ஏப்.16ல் வருகிறது.