கங்கையில் பிறந்ததால் முருகனுக்கு ‘காங்கேயன்’ என்று பெயர். இதைப் போலவே விநாயகரையும் கங்கையோடு சம்பந்தப்படுத்தி ‘த்வை மாதுரன்’ என குறிப்பிடுவர். ‘இரண்டு தாயாரைப் பெற்றவர்’ என்பது இதன் பொருள். பார்வதி மட்டுமின்றி சிவனின் மூத்த மனைவியான கங்கையும் தாய் என்ற வகையில் விநாயகருக்கு இந்த பெயர் வழங்கப்படுகிறது. தண்ணீரைக் கண்டால் யானை விளையாடி மகிழும். அம்மாவைக் கண்ட குழந்தை மகிழ்வது போல விநாயகர் நீரி்ல்(கங்கையில்) துள்ளி விளையாடுகிறார்.