மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2022 04:04
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துங்கியது.விழா நாட்களின் போது அம்மனும்,சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று வந்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 14 ம் தேதியும், தேரோட்டம் 15ஆம் தேதியும் நடைபெற்றது.விழா நாட்களின் போது தினந்தோறும் இரவு கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா நேற்று தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானிகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோரும்,பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி.,சுந்தரமாணிக்க தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.