Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னூர் தந்தி மாரியம்மன் ... ஐயாரப்பர் கோயிலில் சமயக்குறவர்களுக்கு 7 ஊர் சாமிகள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி ஐயாரப்பர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒப்பிலியப்பன் கோவிலில் ராமருக்கு கனகாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஒப்பிலியப்பன் கோவிலில் ராமருக்கு கனகாபிஷேகம்

பதிவு செய்த நாள்

19 ஏப்
2022
05:04

தஞ்சாவூர்: தென்னக திருப்பதி என போற்றப்படும், 108 திவ்ய தேசங்ககளில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயில்  வேங்கடாசலபதிசுவாமி திருக்கோவிலில், ராமநவமி உற்சவத்தையொட்டி, ராமபிரானுக்கு 1008 பொற்காசுகளை கொண்டு கனகாபிஷேம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவிலில், ஆண்டு தோறும் ராமநவமியையொட்டி, சீதா கல்யாணம், கனகாபிஷேகம், பட்டாபிஷேகம் ஆகியவை வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அது போல இந்தாண்டு கடந்த 10ம் தேதி விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஸ்ரீராமபிரான், ஸ்ரீ சீதாதேவி, ஸ்ரீலட்சுமணர் ஆகியோருக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க, 1008 பொற்காசுகள் கொண்டு கனகாபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து அனுமனுக்கும் கனகாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து முல்லை, மல்லிகை, வெண்தாமரை, வெள்ளை மற்றும் சிவப்பு அரளி, மரிக்கொளுந்து உள்ளிட்ட பலவகை நறுமணம் மிகுந்த வண்ண மலர்களை கொண்டு சிறப்பு மலராபிஷேகமும், நாதகானத்துடன் ராமர் பட்டாபிஷேகமும் வெகுசிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு ... மேலும்
 
temple news
மைசூரு: கர்நாடகாவின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில், 3,473 ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் பிரம்மாண்ட ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar