Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஒப்பிலியப்பன் கோவிலில் ராமருக்கு ... கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா: திருநங்கையர் தாலி கட்டி வழிபாடு கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயாரப்பர் கோயிலில் சமயக்குறவர்களுக்கு 7 ஊர் சாமிகள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
ஐயாரப்பர் கோயிலில் சமயக்குறவர்களுக்கு 7 ஊர் சாமிகள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

20 ஏப்
2022
08:04

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஐயாரப்பர் கோயில் சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு சமயக்குறவர்களுக்கு 7ஊர் சாமிகள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதினம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஐயாரப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் நாதசன்மா, அனவித்தை ஆகிய சிவபக்தர்களால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்புக்குரியதாகும். இவ்வாலயத்தில் திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான பெருவிழா போன்று ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சப்தஸ்தான பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சப்தஸ்தான பெருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழுர் சுவாமிகள் எழுந்தருளும் சப்தஸ்தான திருவிழா  இரவு நடைபெற்றது. முன்னதாக, ஐய்யாரப்பர் ஆலயத்தில் இருந்து ஐயாரப்பர் பஞ்சமூர்த்திகளுடன், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர், சோழன்பேட்டை அழகியநாதர், கூறைநாடு புனுகீஸ்வரர், சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர், திருஇந்தளுர் தான்தோன்றீஸ்வரர் மயிலாடுதுறை மாயூரநாதர், ஆகிய 7 ஆலயங்களின் சுவாமிகளுடன் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் எழுந்தருளி சமயக்குரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சி கொடுக்கும் உற்சவம் நடைபெற்றது. அங்கு அனைத்து சுவாமிகளுக்கும் திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பட்டு அணிவித்து வழிபாடு செய்தார். பின்னர் மஹா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கை பக்தர்களை பரவசபடுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, தியாகம், மனிதநேயம்... இந்தச் சொற்கள் அனைத்தும் ஒன்றாகக் கலந்த உருவமே பகவான் ஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
பல்லடம் அடுத்த, அய்யம்பாளையம் கிராமத்தில், வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. சர்ப்ப தோஷம் காரணமாக ... மேலும்
 
temple news

தேய்பிறை சஷ்டி செப்டம்பர் 14,2025

கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news

தேய்பிறை பஞ்சமி பூஜை செப்டம்பர் 14,2025

சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி அம்மனுக்கு ... மேலும்
 
temple news
தொழுவூர் ஊராட்சியில் பொன்னியம்மன் குளத்தை சீரமைத்து, சுற்றி வேலி அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar