பதிவு செய்த நாள்
20
ஏப்
2022
02:04
அவிநாசி: அவிநாசி அருகே , நடுவச்சேரியில் உள்ள சிவளாபுரி அம்மன் கோவிலில், 36வது ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், அம்மனுக்கு அபிஷேகம், குண்ட ம் திறப்பு, பூப்போடுதல், தீர்த்தக்குடம், பூச்சட்டி எடுத்து வருதல், வேல் பூஜை செய்தல் ஆகியவை நடந்தன. நேற்று அதிகாலை , 3:00 மணிக்கு, படைக்கலம் எடுத்து வருதல், 5:00 மணிக்கு பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பூ குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, காலை , 9:00 மணிக்கு, மறுபூஜை, மஞ்சள் நீராடல், சுவாமி திருவீதி உலாவுடன், விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.