கூடலுார்:முதுமலை, மசினகுடி ஆனைக்கட்டி மாசி கரியபண்ட அய்யன் கோவில் திருவிழா, 17ல் சிறப்பு பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம், காலை, 9:00 மணிக்கு குண்டத்திற்கு மரம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. பிற்பகல், 2:30 மணிக்கு சிறியூர் மாரியம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சியும்; 3:00 மணிக்கு ஸ்ரீ கொங்காளி அய்யனை அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு முடி எடுத்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:30 மணிக்கு அய்யன் புலிமேல் பவனி வரும் நிகழ்ச்சி, வண்ணக்குடைகளுடன் ஊர்வலம் நடந்தது. நேற்று, காலை சிறப்பு பூஜைகளை தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு பக்தர்கள் தீ குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் பக்தர்கள் பங்கேற்று அய்யனை வழிப்பட்டனர்.