வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2022 08:04
தேனி: தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக நேற்று கம்பம் நடுதல் நிகழ்சி நடந்தது. இக்கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மாவிளக்கு, அக்னிச்சட்டி, காவடி எடுத்து நேர்த்தி கடன்களை செலுத்துவர். இந்தாண்டு சித்திரை திருவிழா துவக்க நிகழ்சியாக கம்பம் நடுதல் நேற்று நடந்தது. முல்லையாற்றங்கரையில் பரம்பரை முகமைதாரர் குபேந்திரபாண்டியன், அனைத்து சமூக முகமைதாரர்கள் முன்னிலையில் வன்னிமர கொடி கம்பத்திற்கு பூஜை நடந்தது. பின், ஊர்வலமாக எடுத்துவரபட்ட கொடி கம்பம் கோயிலின் மூலத்தானத்தில் எதிரே உள்ள மேடையில் ஊன்றப்பட்டது. முல்லையாற்றில் நீர் சுமந்து வந்து கம்பத்திற்கு ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர். ஏப்., 19 முதல் மே 17 வரை நடக்கும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மே 10ல் பூப்பல்லக்கில் அம்மன் ஊர்வலம், மே 11ல் முத்துப்பல்லக்கில் புறப்பாடு, மே 12ல் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு, மே 13ல் தேரோட்டம், மே 16ல் தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மே 17 ல் ஊர் பொங்கலுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர்கள் சுரேஷ், ஆறுமுகநயினார் செய்திருந்தனர்.