பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா: பூத்தட்டுக்களுடன் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2022 08:04
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடந்த பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து அம்மனை வழிபட்டனர்.
நேற்று அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பூச்சொரிதல் துவங்கியது.சப்த மாதர்களில் நடுவில் சர்வ அலங்காரத்தில் மூலவர் அம்மன் அருள்பாலித்தார்.தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு பாரி, மதுக்குடம், பால்க்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூத்தட்டு செலுத்தினர். மாலை 5:00 மணிக்கு அபிஷேகம் நடந்து அம்மன் சந்தனக்காப்பு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து விடிய, விடிய பக்தர்கள் அம்பாளை தரிசித்தனர். இன்றுஅதிகாலை 4:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் நடந்து பூச்சொரிதல் நடந்தது.தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று மாலை 6:30 மணி அளவில் காப்புக் கட்டப்பட்டு வசந்தப் பெருவிழா துவங்குகிறது.