* நேரத்தை வீணாக்காமல் கடமையை செய். சிறப்பான எதிர்காலம் அமையும். * கடவுளுடன் பேசுவது வழிபாடு. அவர் பேசுவதை கேட்பது தியானம். * சொல்வது எளிது. அதன்படி நடப்பது கடினம். * பணம் இல்லாதவன் ஏழை அல்ல. பேராசை உள்ளவனே உண்மையான ஏழை. * உன்னிடம் உள்ள குற்றத்தை கவனி. பிறரிடம் உள்ள நல்ல குணத்தைப்பார். * ஆன்மிக சிந்தனை வளர வளர பிரச்னைகள் தேய ஆரம்பிக்கும். * பணம் இல்லாவிட்டாலும் நல்ல மனம் இருந்தால்கூட பிறருக்கு உதவலாம். * ஆயிரம் அறிவுரைகளை வழங்குவதை விட, ஒரு பயனுள்ள செயலில் ஈடுபடு. * உலகமே ஒரு பெரிய பல்கலைக்கழகம். அதில் நீ சந்திக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியரே. * உணவை வீணாக்காதே. அன்னதானம் செய்த புண்ணியத்தை பெறுவாய். * ருசிக்காக இல்லாமல் விரைவில் செரிக்கும் உணவை சாப்பிடு. * ரோஜாவின் அழகை பார்ப்பவன் அறிவாளி. அதில் உள்ள முள்ளை காண்பவன் முட்டாள். * உடல்நலம் இல்லாதவன் சாப்பிட விரும்புவதில்லை. மனநலம் இல்லாதவன் கடவுள் மீது பக்தி செலுத்துவதில்லை. * பிறருக்கு உதவ வேண்டும் என நினைத்தால்கூட கடவுளின் பார்வை உன் மீது விழும். * வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளை கண்டு கலங்காதே. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்.