தூத்துக்குடி பனிமயமாதா கோயில் பிரமாண்ட திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2012 11:07
தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமயமாதா கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நேற்று கொடிப்பவனி ஊர்வலம் நடந்தது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் மிகப் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இந்த திருவிழாவை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடுவதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளது. கிறித்தவ ஆலயங்களில் சிறப்பு வாய்ந்த தூத்துக்குடி பனிமயமாதா போராலயத்தின், 430 வது ஆண்டு திருவிழா, இன்று காலை 8.55 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் பேராலய கொடிமரத்தில் கொடியேற்றி துவக்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் யிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 10நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் மாதாவிற்கு சிறப்பு திருப்பலி உள்ளிட்டவைகள் நடக்க இருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மாதாவின் சப்பர பவனி வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற இருக்கிறது. நேற்று மாலை இன்று ஏற்றக் கூடிய மாதா படம் பொறுத்திய கொடி பவனி நடந்தது. மாதா கோயிலை சுற்றியுள்ள இடங்களுக்கு கொடி பவனி ஊர்வலம் நடந்தது. இதில் பங்குதந்தை வில்லியம் சந்தானம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் தான் அடுத்த ஆண்டு தங்கதேர் பவனிக்குறிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.