சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2012 11:07
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், ஆடித் திருவிழா கொடியேற்றம் நடந்தது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு கேடயத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. நாள்தோறும் காலையில் கேடயத்திலும், இரவில் அன்னவாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் போன்றவற்றில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். ஜூலை 31 ல் இரவு பூப்பல்லக்கும், ஆக., 2 ல் தேரோட்டமும் நடைபெறும். ஆக., 4 ல் தீர்த்தவாரியும், தெப்ப உற்சவமும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி மற்றும் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.