Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பஞ்ச சபைகளும் ஐந்தெழுத்தும் வருத்தினி ஏகாதசி: சிறப்பும் மகிமையும்! வருத்தினி ஏகாதசி: சிறப்பும் ...
முதல் பக்கம் » துளிகள்
அட்சய திரிதியையில் தங்க நெல்லிக்கனி அபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அட்சய திரிதியையில் தங்க நெல்லிக்கனி அபிஷேகம்!

பதிவு செய்த நாள்

25 ஏப்
2022
03:04

காலடி: இந்து மத குலகுரு ஆதிசங்கரரின் அவதார தலமான காலடி கிருஷ்ணர் கோயிலில், அட்சய திரிதியையை ஒட்டி மே 3ம் தேதி கனகதாரா யாகம் நடக்கிறது. ஆதிசங்கரர், அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில், ஒரு ஏழைப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷாம் தேஹி என்று பிக்ஷை கேட்டார். அந்த பெண், தன் கணவர் ஏகாதசி விரதம் முடித்து உண்பதற்காக வைத்திருந்த உலர்ந்த நெல்லிக்கனியை தானமாக கொடுத்தார்.

அந்த ஏழையின் செயல் ஆதிசங்கரரின் உள்ளத்தை உருக்கியது. இது போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால், அது மற்றவர்களுக்கும் உதவும் என்ற அடிப்ப டையில், ஆதிசங்கரர் மகாலட்சுமியை துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். மகிழ்ந்த மகாலட்சுமி, அந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள்.
இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விதத்தில், எர்ணாகுளம் அருகிலுள்ள காலடி கிருஷ்ணன் கோயில் யாக மண்டபத்தில் வருகிற மே 1 முதல் 6 வரை கனகதாரா யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள், கனகதாரா யந்திரம் வைத்து, 32 நம்பூதிரிகள், 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி அர்ச்சனை செய்வர். மே 3 அட்சய திரிதியை அன்று காலை 9 மணிக்கு, மகாலட்சுமிக்கு தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகளால் அபிஷேகம் நடக்கும். அபிஷேக தங்க, வெள்ளி நெல்லிக்கனிகள் விற்பனை செய்யப்படும். இந்த நெல்லிக்கனிகளை பக்தர்கள் வாங்கி சென்றால், சிறந்த உடல் வளமும், செல்வவளமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

தொடர்புக்கு: 093888 62321

கனகதாரா எந்திரம்: ரூ. 501
தங்க நெல்லிக்கனி: ரூ. 15,001
வெள்ளி நெல்லிக்கனி: ரூ. 2,001
பஞ்சலோக நெல்லிக்கனி: ரூ. 1.001
லெக்ஷ்மி நாராயண அபிஷேகம்: ரூ. 20,001
பிராமண தட்சிணை: ரூ. 1001
அன்னதானம்: ரூ. 8001
கனகதாரா அர்ச்சனை: ரூ. 101
நெல்லிக்கனி பாரா: ரூ. 51
நெல்லிக்கனி சமர்ப்பணம்: ரூ. 10

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.    * புத்தகத்தால் வரும் ... மேலும்
 
temple news
* பொறுமையே வெற்றிக்கு அடிப்படை. இதை உணர்ந்து செயல்படு.  * ஒவ்வொருவரிடமும் தெய்வீக சக்தி உள்ளது. அதை ... மேலும்
 
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar