சாத்தையனார் கோவில் விழா : வடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2022 08:04
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனூர் மகா சாத்தனார் கோவில், சித்திரை விழா ஏப்ரல் 20ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் தொடர்ச்சியாக தினமும், இரவில் பறை முழக்கம் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் ஆறாம் நாளான நேற்று, வடம் எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. அய்யனார் கோவிலில் இருந்து கிராமத்தார்கள் கயிற்றால் பின்னப்பட்ட நீண்ட வடத்தை, ஊர்வலமாக தூக்கிச் சென்று, ஊரின் நடுவிலுள்ள அரசமரத்தில் வைத்து வழிபாடு செய்தனர். முக்கிய விழாவான எருதுகட்டு விழா, நாளை ஏப்ரல் 27 ல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சாத்தனூர் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.