திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதி சுந்தரர் பூஜை விழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு சுந்தரர் திருமணக் கோலத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 9 மணிக்கு சிவபெருமான் அடிமை சாசனம் காட்டும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடந்தன. முற்பகல் 11 மணிக்கு கிருபாபுரீஸ்வரர் ரிஷபாரூடராக காட்சியளித்தார். அருட்டுறைநாதன் அருட்சபையின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு சுந்தரர் குருபூஜை, பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை, மதியம் 1 மணிக்கு அருளாலர் சுந்தரர் அருட்சபை சார்பில் அன்னதானமும் நடக்கிறது. இரவு சுந்தரர் வீதியுலா நடக்கிறது.