சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பவுஞ்சிப்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நாக மாரியம்மன் கோவில் மண்டல அபிஷேக பூஜை நடந்தது. அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஊராட்சி தலைவர் பச்சமுத்து தலைமையில் ராயசமுத்திரம் செல்வம் அன்றும், இன்றும் என்ற தலைப்பில் பேசினார். உலகில் சிறந்தது இறைவன் படைப்பா? மனிதன் படைப்பா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது. ஆசிரியர் சம்சுதீன், கணேஷ், லட்சுமிபதி, செந்தில்குமார் ஆகியோர் வாதிட்டனர். நடுவராக முத்தமிழன் இருந்தார்.