பதிவு செய்த நாள்
26
ஜூலை
2012
11:07
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பிராமணாள் கைங்கயர்ய டிரஸ்ட் சார்பில் ஏகதின லட்சார்ச்சனை நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதையொட்டி காலை ஒன்பது மணிக்கு லட்சார்ச்சனை நிகழ்ச்சிகள் துவங்கப்பட்டு, மதியம் ஒரு மணி வரையும், தொடர்ந்து, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் இரண்டு பிரிவுகளாக லட்சார்ச்சனை பூஜைகள் நடந்தது.ஏகதின லட்சார்ச்சனையையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டை பிராமணாள் கைங்கர்ய மானேஜிங் டிரஸ்டி சந்திரசேகரன் தலைமையில் டிரஸ்டிகள் ஜீவகண்ணாராவ், சிவராம்சுக்கல், விஸ்வநாதன், கல்வி ஜெயராமன், ராமச்சந்திரன், நடராஜன், பார்த்தசாரதி, ராஜி சிவாஜிரவி, நரசிம்மன் ஆகியோர் செய்திருந்தனர்.