காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா குறித்து ஆலோசனைக்கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2022 12:04
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா குறித்த கோவில் நிர்வாகம் சார்பில் உபயதாரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள உலகப் புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா எதிர்வரும் ஜூலை 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற இருப்பதால் அதற்கான உபயதாரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் அறங்காவலர் வாரியத் தலைவர் கேசவன் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மாங்கனித் திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக சென்ற 2020,-2021ஆகிய இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி ஆலயத்தின் உள்ளேயே நடைபெற்றது.தற்போது பெருந்தொற்று குறைந்து வருவதால் இவ்வாண்டு வழக்கம் போல வெளியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு திருவிழாவில் ஏறக்குறைய 75 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்வாண்டு பக்தர்கள் கூட்டம் இரட்டிப்பாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி மாங்கனி திருவிழா நடைபெற உள்ள நிலையில் உபயதாரர்கள் விழாவை நடத்துவதற்கு மிகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.மேலும் ஆலய சிவாச்சாரியார் விழா நடைபெறும் நாட்கள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் துணைத்தலைவர் ஆறுமுகம்,பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் ஆலய சிவாச்சாரியார்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.