பதிவு செய்த நாள்
26
ஏப்
2022
12:04
சென்னை: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம், வரும் 30ம் தேதி நடக்கிறது. பகுதி சூரிய கிரஹணம் நள்ளிரவில் நடப்பதால், இந்தியாவில் பார்க்க முடியாது.
இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரஹணம் இந்திய நேரப்படி, 30ம் தேதி நள்ளிரவு 12:15 மணிக்கு துவங்கி, மறுநாள் அதிகாலை, 4:08 மணி வரை நீடிக்கும். இது, பகுதிநேர சூரிய கிரஹணம். நள்ளிரவில் இந்நிகழ்வு நடப்பதால் இந்தியாவில் தெரியாது. அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளிலும், இந்த சூரிய கிரஹணத்தை பார்க்க முடியும். இந்த ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரஹணம் அக்., 25ல் நிகழ்கிறது.
பரிகாரம்: இந்த சூரிய கிரகணம் மேஷ ராசியில் நடப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு இதன் தாக்கம் அதிகம் இருக்கும். மேஷ ராசியில் சூரியன், சந்திரன், ராகு மூவரும் இணைவதால் மேஷம், விருச்சிகம் கடகம் என 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். கிரகணத்தின்போது, காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும், வீட்டில் குல தெய்வத்தை வழிபடுவதும் சிறப்பை தரும். நள்ளிரவில் இந்நிகழ்வு நடப்பதால் இந்தியாவில் பாதிப்பு இல்லை.