திருநாவுக்கரசர் பிறந்த தலத்தில் குருபூஜை நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2022 07:04
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவாமூரில் திருநாவுக்கரசர் பிறந்த தலத்தில் குருபூஜை நிறைவு விழா நேற்று நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவாமூரில் சைவ குரவர்களில் முதல்வரான திருநாவுக்கரசர் பிறந்த அவதார தலத்தில் நேற்று குருபூஜை விழா கடந்த 24ம் தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது. விழாவையொட்டி கடந்த 24 ம்தேதி சிவபூஜையுடன் விழா துவங்கியது. மாலை 6:30 மணக்கு ஊரான் அடிகளாரின் வழக்காடு மன்றம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் 25ம் காலை 10:00 மணிக்கு நவக்கிரக ேஹாமம், மாலை 6:00 மணிக்குமங்கள இசை, இரவு 7:00 மணிக்கு அப்பர் சுவாமிகள் அருள்வாழ்வு உணர்த்துவது சமூக கட்டமைப்பு மேன்மையா,தனி மனித உணர்வா என்கிற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு மகந்யாசருத்ர ேஹாமம், மகந்யாச ருத்ர அபிஷேகம் நடந்தது. விழாவில் தருமைபுர 26 வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். பகல் 1:00 மணிக்கு மகேஸ்வர பூஜை, இரவு 7:30 மணிக்கு அப்பர்சுவாமிகள் மூலவர் உற்சவர் மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு நாதஸ்வர இன்னிசைமுன் செல்ல அப்பர்சுவாமிகள் திருவீதியுலா , திருமுறை ஒதி அப்பர் ஐக்கிய காட்சியுடன் நிறைவு பெற்றது.