சேந்தமங்கலம் : சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரத்தில் கருமாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு தீக்குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரத்தில் கருமாரியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, தீக்குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கருமாரியம்மன் வெள்ளி கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.