ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீரங்கத்தில் ஏப்.29ம் தேதி நடக்கும் சித்திரை தேர்திருவிழாவில் ரங்கநாதருக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சாற்றபட்ட வஸ்திரம், கிளி, மங்கலப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டது. ஆண்டுதோறும் ஸ்ரீரங்கத்தில் நடக்கும் சித்திரைத் தேரோட்டத்தின்போது ரெங்கநாதருக்கு சாற்றுவதற்காக வஸ்திரங்கள், கிளி, மங்கலப்பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து கொண்டு செல்லப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு இன்று காலை 11:00 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னாருக்கு வஸ்திரம், கிளி, மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அப்பொருட்கள் ஒரு கூடையில் வைக்கப்பட்டு ஸ்தானிகம் ரமேஷ் பிரசன்னா தலைமையில் கோயில் பிரகாரம், மாடவீதி சுற்றி வந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர்.